11-வதாரம் !!! - புதிய கமல் கதை

'தசாவதாரம்', கமலின் முக்கியமான சாதனைகளுள் ஒன்று என்றாலும், புஷ் கமல், சீன கமல், வில்லன் கமல் மற்றும் இஸ்லாமிய கமல்களில், கமலை தேடவேண்டியிருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது... 'மாறுவேடப்போட்டி, மனதில் ஒட்டாத கமல் பாத்திரங்கள்,வழுவான கதையில்லை' என இன்னபிற விமர்சனங்களும் 'பத்து'(!) திசைகளிலிருந்தும் வருகிறது..


'கேயோஸ் தியரி'(Chaos Theory - சரியா எழுதிருக்கேனா?) என்னும் கருத்துருவுக்கு '10-வதாரம்' படம் ஒரு நல்ல உதாரணம் என்று விகடனில் படித்தது வியப்பான விஷயமாக இருந்தது.


கலை-வியாபார பிரச்சனை என்பதால், சில முக்கிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.. நமது கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு??!!!

பத்து கமல் யார்யார் என்று அவருடைய பழைய படங்களிலிருந்தே தேர்வு செய்யலாம்.. அதே கதாபாத்திரத்தின் குணநலன் மாறாமல்!


'வேலுநாயக்கர்' கமல் அப்பாவுக்கு, இரு மகன் கமல்கள். உரசினால் பொறி பறக்கும் அதிரடி 'சத்யா' கமல் ஒருத்தர்; அப்பாவி 'மகாநதி' கமல் இன்னொருத்தர்;


வேலுநாயக்கருக்கு தங்கை ஒருவர் உண்டு.. அவர் பெயர் 'அவ்வை சண்முகி'. அவருடைய இரண்டு மகள்கள்தான் நாயகிகள்.. (ஆனால் அவர்களும் கமலாகிவிட்டால், யாரும் பார்க்கமாட்டார்கள்)

எப்பொழுதும் கொலைவெறியோடு மிருகமாக அலையும் 'ஆளவந்தான்' கமல், தன் தாயை கொன்றவர் 'வேலுநாயக்கர்'தான் என சந்தேகித்து அவரை பழிதீர்க்க வெறியோடு துரத்துகிறார்.

இதற்கிடையில் 'என்கவுண்டர்' ராகவன் கமலும் வேலுநாயக்கரை 'போட்டுத்தள்ள' முடிவுகட்டுகிறார்.

அப்புறம் 'சாப்ளின்' செல்லப்பா, 'அப்பு', 'டேவிட்' கமல்(கைதியின் டைரி), 'பயந்த' தெனாலி, பாலக்காட்டு காமேஸ்வரன் ஆகியோரும் இருக்கிறார்கள்...

ஓஓஓ.. 11 ஆச்சா...??

சரி.. '11-வதாரம்'னு வச்சுக்கலாம்..

கதையை இன்னும் தொடர்பவர்களுக்கு ஒரு "" !!!

Labels: , ,