காரணம் ஆயிரம்…

 

சில பல தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்கமுடியாமல்,  தமிழ்ப்பூ-விலிருந்து, ஒரு புதிய முகவரியில் பதிவிடலாம் என்றிருக்கிறேன்..

என்னை ஊக்கிவித்துக்கொண்டிருக்கிற நண்பர்களுக்கும், தமிழ்மணம், தேன்கூடு, சென்னை நூலகம், தினமலர் முதலான வலைதளங்களுக்கும் எனது நன்றிகள்…

புதிய பதிவகம் போனதும், வேறு சில தலைப்புகளில் எழுதலாம் என்றிருக்கிறேன்… சிற்சில புது முயற்சிகளும் செய்யலாம் என்றே தோன்றுகிறது..

தொடர்ந்து நண்பர்களின்  ஊக்குவிப்புகளும், பதிவு திரட்டிகளின் ஆதரவுகளும் தருமாறு வேண்டிக்கேட்டுகொள்கிறேன்..

Lets go to  காரணம் ஆயிரம் !!!

"பொய் வாழ்வின் பூரணமே"

ஐடி கம்பெனிகளில் புதிதாக சேரும் பொறியாளர்களை, 'Welcome to this company's family' என்று வரவேற்பார்கள்..

ஆனால் அவர்களை Layoff செய்யும்போது Employee-களின் குடும்பத்தை பற்றி நினைத்து பார்ப்பார்களா..??

கண்டிப்பாக மாட்டார்கள் !!!

வேலையிழப்பினால், அவர்களுக்கும் நிதி நெருக்கடி இருக்கும்..
அவசரகால நடவடிக்கை தேவைப்படும்..

அந்த சமயத்தில், நிறுவனங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச உதவி, அவர்களுக்கு Outplacement வசதிகள் செய்து தருவதே..

Outplacement என்றால் அடுத்து எதாவது ஒரு நிறுவனத்தில் அவர்கள் வேலைக்கு சேருவதற்கு உதவுவது..

'எதற்காக வேலை மெனக்கெட்டு அவர்களுக்காக நேரத்தை வீணாக்க வேண்டும்???'

ஏனெனில் அவர்கள் (ஒருகாலத்தில்) நிறுவனத்தின் குடும்பத்தினர்தான்.. நிறுவனம் சிறக்க பாடுபட்டவர்கள்தான்..

அவர்களின் அவசரகாலத்திற்கு உதவாவிட்டால், நிறுவனத்தின் அவசரத்திற்கு அவர்களும் உதவமாட்டார்கள்..

அதாவது, புது பணிகள் வரவில்லை என்றுதான் பணியாளர்கள் அனுப்பபடுகிறார்கள்... இன்னும் சில நாட்களில், நிறைய பணிகள் வரும்பொழுது, நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற நிபுணர்கள் கிடைக்கமாட்டார்கள்.. ஏனெனில், விலக்கப்பட்டவர்கள் வேறு துறையை தேர்ந்தேடுத்திருப்பர்கள்..

இன்னொரு பக்கம், தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் குறைவார்கள்.. மற்ற மாணவர்களும் ஐடிக்கு வரமாட்டார்கள்..

ஆகவே, Employerகளே, லாபத்தை மட்டுமே தொலைநோக்கில் பார்க்காமல், 'Resource' எனப்படும் இந்த மென்பொருள் பொறியாளர்களையும் முக்கியமாக மறக்காதீர்கள்...

அவ்வாறு செய்தால்தான் உங்கள் 'பொய் வாழ்வு பூரணமடையும்'...

Labels: , , , ,

11-வதாரம் !!! - புதிய கமல் கதை

'தசாவதாரம்', கமலின் முக்கியமான சாதனைகளுள் ஒன்று என்றாலும், புஷ் கமல், சீன கமல், வில்லன் கமல் மற்றும் இஸ்லாமிய கமல்களில், கமலை தேடவேண்டியிருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது... 'மாறுவேடப்போட்டி, மனதில் ஒட்டாத கமல் பாத்திரங்கள்,வழுவான கதையில்லை' என இன்னபிற விமர்சனங்களும் 'பத்து'(!) திசைகளிலிருந்தும் வருகிறது..


'கேயோஸ் தியரி'(Chaos Theory - சரியா எழுதிருக்கேனா?) என்னும் கருத்துருவுக்கு '10-வதாரம்' படம் ஒரு நல்ல உதாரணம் என்று விகடனில் படித்தது வியப்பான விஷயமாக இருந்தது.


கலை-வியாபார பிரச்சனை என்பதால், சில முக்கிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.. நமது கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு??!!!

பத்து கமல் யார்யார் என்று அவருடைய பழைய படங்களிலிருந்தே தேர்வு செய்யலாம்.. அதே கதாபாத்திரத்தின் குணநலன் மாறாமல்!


'வேலுநாயக்கர்' கமல் அப்பாவுக்கு, இரு மகன் கமல்கள். உரசினால் பொறி பறக்கும் அதிரடி 'சத்யா' கமல் ஒருத்தர்; அப்பாவி 'மகாநதி' கமல் இன்னொருத்தர்;


வேலுநாயக்கருக்கு தங்கை ஒருவர் உண்டு.. அவர் பெயர் 'அவ்வை சண்முகி'. அவருடைய இரண்டு மகள்கள்தான் நாயகிகள்.. (ஆனால் அவர்களும் கமலாகிவிட்டால், யாரும் பார்க்கமாட்டார்கள்)

எப்பொழுதும் கொலைவெறியோடு மிருகமாக அலையும் 'ஆளவந்தான்' கமல், தன் தாயை கொன்றவர் 'வேலுநாயக்கர்'தான் என சந்தேகித்து அவரை பழிதீர்க்க வெறியோடு துரத்துகிறார்.

இதற்கிடையில் 'என்கவுண்டர்' ராகவன் கமலும் வேலுநாயக்கரை 'போட்டுத்தள்ள' முடிவுகட்டுகிறார்.

அப்புறம் 'சாப்ளின்' செல்லப்பா, 'அப்பு', 'டேவிட்' கமல்(கைதியின் டைரி), 'பயந்த' தெனாலி, பாலக்காட்டு காமேஸ்வரன் ஆகியோரும் இருக்கிறார்கள்...

ஓஓஓ.. 11 ஆச்சா...??

சரி.. '11-வதாரம்'னு வச்சுக்கலாம்..

கதையை இன்னும் தொடர்பவர்களுக்கு ஒரு "" !!!

Labels: , ,

(63) யாராச்சும் கேள்வி கேப்பீங்க ???

ஒரு சமயம் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் ஒன்று, எங்கள் ஊர் கல்லூரியில் நடந்தது..

பேராசிரியர் ஒருவர், எய்ட்ஸ் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு மாணவர், "எச்சிலால் எய்ட்ஸ் பரவுமா?
(அதாவது - 'முத்தத்தால் எய்ட்ஸ் பரவுமா?')" எனக்கேட்க,
அதற்கு அவர் அளித்த பதிலை காதை(மூக்கை ??!!) பொத்திக்கொண்டு படிக்கவும்...

"சும்மா ஒரு துளி, ரெண்டு துளிலெல்லாம் வரவாய்ப்பில்ல... எச்சிலில் இருக்கிற
சிறிய அளவு எய்ட்ஸ் கிருமிகள் வயிற்று அமிலத்தில் அழிந்துவிடும்.. ஆனால், ஒரு வாளி நிறைய எய்ட்ஸ் நோயாளியின் எச்சிலை 'மடக்,மடக்' குனு குடிச்சா, ஒருவேளை எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பிருக்கு..!!!"


* * * * * *

சிரிப்பு கடை


மென்பொருளாளர்: "என் கனவுல எப்பவும் ப்ரொகிராம் பண்றமாதிரியே கனவு வருது..!!!"

திட்டமேலாளர்: "இன்னிக்குள்ள முடிச்சி தந்திறியா?"

மென்பொருளாளர்:"???!!!!"

* * * * * *

ஒரு ஃபர்னிச்சர் கடையில்,

"அவரு ரொம்ப எளிமையானவரா இருக்கலாம். அதுக்காக இப்படியெல்லாமா கேப்பாரு..."

"என்ன கேட்டாரு?"

"'டிராயர்' உள்ள மேஜை வேணாமாம். வெறும் 'கோவணம்' உள்ள மேஜை போதுமாம்..!!!"

* * * * * *


(62) தேர்வுகளிலிருந்து கற்றுகொள்வோம் !!!

சின்னதும் பெரியதுமாக சுமார் 15 நேர்முகத்தேர்வுகள்...
எல்லாமே டாட்நெட் (தமிழில்: புள்ளிவலை?!!!) தொழில்நுட்பத்தின்
அடிப்படையில் அமைந்தவை...

சில நிறுவனங்களில் இருந்து தொலைதேர்வும்
(Telecon:டெலிபோன் இண்டர்வியூவுக்கு புதுப்பெயர்) செய்தார்கள்...

கலந்துகொண்டவை சில
நேர்முகத்தேர்வுகள்தான் என்றாலும்,
கற்றுகொள்ளக்கிடைத்தது மிக ஏராளம்...

எந்த தேர்வுக்கும்
தன்னம்பிக்கை குறைவால் பின்வாங்கவும் இல்லை..
சிறிய நிறுவனம் என உதாசீனப்படுத்தவும் இல்லை...

ஒவ்வொரு நிறுவனத்திலும் என்ன தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வது
நல்ல அனுபவமாக இருந்தது...

வகுப்புகளில், புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிட,
தேர்வுகளிலிருந்து கற்றுக்கொள்வது ஒரு இனிமையான
விஷயமாகயிருக்கிறது...

'எவ்ளோ கேள்வி கேட்டாலும் பொறுமையா
(ஓடாம) இருக்கானே...' என என்னுடைய
பொறுமையை மட்டும்(??!!!) வைத்து எனக்கு
ஒரு நல்ல இடத்தில் வேலையையும் தந்துவிட்டார்கள்...

கிடைத்த இடத்தை தக்கவைத்துகொள்வதற்கு
தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும்...

Labels: , , , ,

(61) 'உள்ளேன் ஐயா !!!' (இரண்டாம் வருடமாக)

என்ன சொல்ல வந்தேன்...
மறந்தேபோச்சே !!!
ஆங்..
ஞாபகம் வந்திருச்சு...
தமிழ்ப்பூ-விற்கு இரண்டாம் வருட பிறந்தநாள்...

என்னங்க...?
'வலைபதிவு நடத்துகிறாயா?
வருகைபதிவு மட்டும் தந்துகொண்டிருக்கிறாயா?'
என்று கேட்பது காதில் விழுகிறது... :)

இந்த சமயத்தில்...நினைவுகூறுகிறேன் -
நான் விரிவுரையாளனாக வாழ்ந்த காலத்தில் எழுதிய இந்த கதையை ('வேரறுந்த மரங்கள்'). 'எனக்குள் ஏற்படுத்திய அதே சிலிர்ப்பை உங்களிடமும் ஏற்படுத்தும்' என்ற நம்பிக்கையுடன்.

தொடர்ந்து எழுத ஆசை... மீண்டும் வருகிறேன்...

Labels:

வேடிக்கையான புகைப்படக்காரர்கள் (போட்டோ)

போட்டா புடிக்கும்போது, ஜப்பான் போட்டாக்காரர்கள் 'வடிவேலு'த்தனமாய் சில வேடிக்கை பண்ணுகிறார்கள் ...

நம்மூரிலும் கூடத்தான் இப்படி இருக்கிறார்கள்?

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

ஒரு மாறுதலுக்காக இந்த போட்டோ பதிவு....

:)))

திரும்பிப்பார்க்கிறேன்...

ஏதோ இப்போதுதான் தொடங்கியதுபோல இருந்தது...
ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்டது...
வலைப்பூ ஆரம்பித்து !

வருடத்தில், கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கையில், ஏகப்பட்ட வலைபதிவாளர்களின் சுவடுகள்...

என் காலடித்தடயத்தை கண்டேபிடிக்கமுடியவில்லை...

ஏதோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, 'இதோ ஒரு சுட்டி,இதோ ஒரு சுட்டி'என அவ்வப்போது 'உள்ளேன் ஐயா' போட்டுக்கொண்டிருக்கிறேன்...

இந்த ஒரு வருடத்தில், பெரிதாக எதையும் செய்துவிடவில்லை...
எல்லையற்ற ஊடகமான இணையத்தில், நல்ல நண்பர்களை சம்பாதித்ததைத் தவிர.

நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது...
('அதற்கு நிறைய படிக்கவும் வேணும்' என்று நானே தாமதிக்கிறேன்)

மீண்டும் வருகிறேன்...ஒரு நல்ல நாளில் :))

இது ஒரு சுட்டிதான்...

இந்த தளத்தில், 'செய்து பாருங்கள்' டைப்பில் சில பிராஜக்ட்கள் கொடுத்திருக்காங்க...
ஒரு லாப்டாப்பை வைத்துக்கொண்டு, நாமாகவே எப்படி ஒரு 'டிஜிட்டல் போட்டோ பிரேம்-ஐ' தயார் செய்வது என சொல்லித்தருகிறார்கள்...

வேலை செய்கிற/செய்யாத ரிமோட் கன்ட்ரோல், ஹார்ட்டிஸ்க், மவுஸ் போன்ற பொருட்களை வைத்து சில விசயங்களை நாமே செய்துகொள்ளலாம்...

ஒரு தடவை போய்ப்பாருங்கள் : http://www.grynx.com/projects/

(58) பிபிசியும், ஆள்மாறிப்போன பேட்டியும்..

நிஜத்தில் நிகழ்கின்ற சில வேடிக்கையான நிகழ்வுகள், திரைப்படங்களில் வருவதைக்காட்டிலும் அதிக சுவாரஸியமானவை.

இங்கே பாருங்கள்....

ஆப்பிள் நிறுவன வல்லுனரை பேட்டி எடுப்பதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பெயரில் வராண்டாவில் உட்கார்ந்திருந்த ஒரு டாக்ஸி டிரைவரை (தெரியாமல்) கூட்டிவந்து, மைக் பொருத்தி, லைவாக பேட்டியெடுத்து...

உண்மையான வல்லுனர் இதை டிவியில் பார்த்து அதிர்ந்து... பிபிசியின் மீது வழக்கே போட்டுவிட்டார்.

தான் வந்திருப்பது தவறான பேட்டி என்பது கூட தெரியாமல் இந்த ஆசாமி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இருக்கட்டும்... (அவர் அழைக்கப்பட்டிருந்தது ஒரு வழக்கு சம்பந்தமான பேட்டிக்காக... இவர் வந்திருந்தது வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக)

பேட்டியின் தொடக்கத்தில், நியூஸ் ரீடரம்மா தன்னை 'வல்லுனர்' என்று சொல்கிறபோது, இவர் முகத்தில் தோன்றுகிற உணர்ச்சிகளை... இந்த நூற்றாண்டில் எந்த சிறந்த நகைச்சுவை படத்திலும் பார்த்திருக்கமுடியாது.


இங்கே அந்த வீடியோ


ஐயாதான் இப்போ திமிங்கிலம் (எல்லா பேட்டியிலும்)

யூ-ட்யூபில் Guy Goma என தேடல் போடுங்கள்