(55).கிளிசரின் தொடர்களும், குளுகோஸ் விளம்பரங்களும் !
நான் ஒரு 'விளம்பர'ப்பிரியன்...
அட, இருங்கப்பா...
முழுசா கேளுங்க.
இன்றைய காலக்கட்டத்தில் சீரியல் பாக்காதேனு சொன்னா, யாரு கேட்கிறா?
கொடூரம், கொடுமை, கெட்டது ஆகியவற்றை சிறு சிறு உருவகங்களில் புரியவைத்த காலம்போய்விட்டது. "நிஜத்தில் நடப்பதைத்தான் காட்டுகிறோம்" என்ற பசுத்தோலோடு வீட்டுக்கே வருகிறது வன்முறை.
கொடூரம் மிகைபடுத்தி மிகக்கொடூரமாக காட்டப்படுகிறது. எங்கோ நடக்கிற ஒன்றிரண்டு தவறுகள், சக்தி வாய்ந்த ஊடகங்கள்மூலம் பரப்பப்படுகின்றன.
(சமீபத்தில் நடந்த சில குற்றங்களுக்கு, டிவி தொடர்கள்தான் காரணம் என்று கூண்டில் ஏற்றுகிறார்கள் மனநோய் நிபுணர்கள்)
ஒருவகையில், தொடர்களால் ஏற்படுகிற மனயிறுக்கத்திற்கு, விளம்பரப்படங்கள் ஒரு மாற்றாக இருக்கின்றன.
சரி விஷயத்திற்கு வருவோம்...
எத்தனைபேர் சேனல் மாற்றாமல் விளம்பரம் பார்ப்பீங்க?
ஒரு விளம்பரத்தில், அமிதாப்ஜி பம்முபம்முவென்று பம்முகிறார்.
ஏன்...?
போகிற வழியெல்லாம் 'மாறுவேட' வாண்டுகளின் அன்புத்தொல்லை...
(அந்த குட்டி சர்தார்ஜி ஆடுவது நல்லாயில்லை?)
இன்னொரு அருமையான விளம்பரம்(பழசு)...
ஒரு அம்மா ஒரு பக்கம் தண்ணிய எடுத்து மேல கொட்டுவாங்க.
நம்ம மேலதான் கொட்டுறாங்களோனு இவர் கீழ சாய்வார்.
பாத்தா அந்தம்மா நடுவில இருக்கிற கண்ணாடிய துடைச்சிட்டிருப்பாங்க.
இன்னொரு விளம்பரம்.
இதுவும் பழசுதான்.
கல்யாணமாகி மகள் புக்ககம் போகிறாள்...
கவலையுடன் இருக்கிற பெற்றவர்களுக்கு, மாப்பிள்ளை சைகை காட்டுகிறார். 'நான் இருக்கிறேன். பாத்துக்கிறேன்...'
இதேபோல, புதிதாக பள்ளியில் சேரும் மகனை பற்றி தாய்க்கு டீச்சர் சொல்லுவது.... 'நான் இருக்கிறேன். பாத்துக்கிறேன்....'
இதேபோல் பெவிகால் டின்னில், குறுணை சாப்பிட்ட கோழி உடைக்கமுடியாத முட்டையிடுவது, ஒரு இடத்தில் உட்காராத அந்த ராஜஸ்தானிய குழந்தை பெவிகால் டின்னில் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருப்பது...
இவையெல்லாம் ஒரு புன்னகையையாவது வரவழைக்காமல் இருக்கிறதா?
ஜவுளி விளம்பரங்களை பாருங்கள்...
இரண்டொரு நிமடங்களில், குட்டித்திருவிழாவையே கொண்டுவந்துவிடுகிறார்கள்...
வாசகங்களும் ரசனையானவை...(உ.தா. 'தங்கம் வாங்க...தங்கமயிலுக்கு வாங்க...','எல்லா கலர் பட்டும், ஆரெம்கேவில மட்டும்')
அமைதியை, தொலைத்த இடத்தில்தானே தேடவேண்டும்... :)
அதனால, இனிமே என்ன பண்ணலாங்கிறீங்க?
அதான்...அதான்...ஆ...தே...தான்.
4 Comments:
ரொம்ப நாளா சத்தத்தையே காணோம்
ஜொலிக்கும் ஸ்னேகாவும், ஆடித்தள்ளுபட்டி கானா உலகநாதனும்
இண்ட்ரஸ்டிங்
நன்றி பாலசந்தர் சார்...
படிப்பது குறைந்துவிட்டது...
அதனால்தான் எழுதுவதும் குறைந்துவிட்டது என நினைக்கிறேன்.
பணிமாற்றத்தால் ஏற்பட்டிருக்கிற வேலைப்பளுவும் ஒரு காரணம்.
வாரம் ஒரு தடவையாவது, நிறைய படித்து, நிறைய எழுதவேண்டும் என்று மட்டும் ஆசையிருக்கிறது.
அன்புடன்
கார்த்திகேயன்
நன்றி நக்கீரன் சார்.
(என்னை விட நல்லா டிவி பாத்திருக்கீங்க நினைக்கிறேன்)
சவ சடங்குகளை நீண்ட பாடல் அல்லது காட்சிகளுடன் விளக்குவது, சூழ்ச்சி....
இதெல்லாமே, ஆண்களின் மனநிலையைவிட பெண்களின் மனநிலையைதான் வெகுவாக பாதிக்கிறது. அது குடும்பத்தையும் பாதிக்கிறது...
இதுக்கெல்லாம்தான் முதலில் சென்சார் வேண்டும்.
அன்புடன்
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home