6 மனமே 6...
ஆறு விளையாட்டுக்கு செல்வன் சார் அழைத்திருந்ததன் பேரில், இந்தப்பதிவு...
இந்த ஆறு விருப்புகள் எல்லாம் தற்சமயம் ஞாபகத்திற்கு வந்தவை மட்டுமே...
இன்னும் பிடித்தவைகள் இருக்கலாம்...
ஆறு புத்தகங்கள்
கல்கியின் நாவல்கள்,
சிபிஐயின் முன்னாள் அதிகாரி நரசிம்மன் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய ஒரு புத்தகம்(மீண்டும் படிக்க ஆசை...எங்கு கிடைக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்), சுஜாதா அவர்களின் கேள்வி-பதில் நூல்கள்,
மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்', பிற சரித்திர நாவல்கள்,
சில சுயமுன்னேற்ற நூல்கள்...
முணுமுணுக்கும் ஆறு பாடல்கள்
குழலூதும் கண்ணனுக்கு...
ஒரு கிளி உருகுது...
ஆவாரம்பூவு...(அச்சமில்லை2)
கீரவாணி...
சுவாரஸ்யமானது காதல்...(கோடம்பாக்கம்)
tanha dil...(ஷான்)
(இந்த லிஸ்ட் பெரியது...இளையராஜாவின் மோகன், ராமராஜன் பாடல்களை ஒன்று விடாமல் சேர்த்துகொள்ளவும் :) )
ஆறு காமெடியன்கள்
சார்லி சாப்ளின், கலைவாணர், நாகேஷ், வடிவேலு, விவேக்,ரோவன்('மிஸ்டர் பீன்' போகோ உபயம்)...
ஆறில் பூ (மிதந்து) வரும், (
அன்புடன்,
கார்த்திகேயன்
6 Comments:
//சுவாரஸ்யமானது காதல்...(கோடம்பாக்கம்)//
எனக்கும் இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும் ... கேட்டால் அங்கெயே நின்றுவிடுவேன்
கார்த்தி,
அழைத்ததற்கு நன்றி ... நான் எழுதின ஆறு பதிவுலயே மறுமொழி போட்டு மறுபடியும் அழைத்திருக்கீங்க :)
imposition ஆ எனக்கு :)
அழைப்பிற்கு நன்றி கார்த்திகேயன், சேர்ந்தார்ப்போல ஆறு நிமிஷம் கிடைத்தால், ஆறப்போடாம, ஆறு போட வேண்டியதுதான்...
மதனின் 'வந்தார்கள், வென்றார்கள்' ரொம்ப ஆர்வமாய் படித்ததை நினைவு படுத்திட்டீங்க, நன்றி!
சுகா, ஏற்கனவே உங்கள் பதிவில் பார்த்தபோது, இது 'ஆறு பதிவு' என்பது தெரியாமல், மீண்டும் அழைப்பு விடுத்துவிட்டேன். அதனால் என்ன? ரிப்பீட்டு...:)
ஜீவா, 'வந்தார்கள் வென்றார்கள்' நான் படித்து வியந்த புத்தகங்களில் ஒன்று.(ஆங்கிலேய ஆட்சியைவிட மன்னராட்சி கொடுமையானதோ என்று வியந்ததுண்டு).
அன்புடன்
கார்த்திகேயன்
//சுகா
சந்தோஷ்
தினேஷ்
வான்மதி
ஜீவா
//
என்னங்க இது ஆறு காமெடியன்கள் னு இவங்க பேரை எல்லாம் போட்டிருக்கீங்க!
ஆகா...வில்லங்கத்துல மாட்டிவிட பாக்குறீங்களே...
நடுவுல ஒரு வாக்கியம் இருக்குங்க தலைவா !!!
அன்புடன்,
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home