நேனோ ஞாபகங்கள்...

(குமாரின் நேனோ பதிவை படித்தபின் எழுதிய சில துளிகள்)

அப்பொழுது, எங்கள் தஞ்சாவூர் சண்முகாவில், முதன்முதலாக 'டுபாக்கூர்' ஆய்வுமையம் தொடங்கியிருந்த சமயம்...(மனிஷ விகார் TIFAC-COREக்கு மெஸ்காரர்கள் இட்ட செல்லப்பெயர்)

நேனோ தொழில்நுட்பத்தின் ஒரு வார கருத்தரங்குக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்...(ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருத்தருக்கு நம்மூர் தோசை மிகவும் பிடித்துவிட்டதாம்.அப்படி என்னயா இருக்கு நம்மூரு தோசையில).

சீனியர் ஆராய்ச்சியாளர்கள்,புதிதாக ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. முதுகலை மாணவர்களான எங்களுக்கு கூட அனுமதியில்லை...(பேராசிரியர்களே இரண்டு பேர்தான் கலந்துகொண்டார்கள்) 'ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காத' பரிதாபத்தோடு சுற்றிக்கொண்டிருந்தோம்...

'நேனோ-னா என்ன?' என்ற ஆர்வத்தில் அப்படியிப்படி போராடி ஒரு சாவேனர்-ஐ 'சுட்டு' அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் தெரிந்துகொண்டேன்...

மைக்ரோ என்ற அளவை ஆயிரமாக உடைத்தால், அந்த 'ஆயிரத்தில் ஒருவன்' தான் நேனோ. இப்போ இருக்கிற கணினி(மைக்ரோகம்ப்யூட்டர்), நுண்ணியசெயலாக்கி(மைக்ரோபிராஸஸர்) ஆகியவை நேனோவாக மாற்றப்பட்டால், மீநுண்ணியசெயலாக்கிகள்(Nanoprocessors), மீச்சிறியகணினிகள் கிடைக்கும்.

கேன்சர் செல்களை அழிக்கும் நேனோ ரோபோக்களை "doctor in the cell" என்ற செல்லப்பெயரால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்... வெளியிலிருந்து இயக்கப்பட்டாலும், கேன்சரை அழிக்கிறேன் பேர்வழி என நமது வீரர்களை(மனித செல்கள்) தாக்கிவிட்டால் என்ன செய்வது என்பதையும் யாராவது சொல்லுங்களேன்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நேனோவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடப்பது பற்றி ஒருமுறை குறிப்பிட்டதாக நினைவிருக்கிறது (கற்றதும்...பெற்றதும்)

'கைட்ரஜன் இயற்கையில இருக்கு, ஆக்ஸிஜனும் இருக்கு. ரெண்டும் சேர்ந்த மூலக்கூறு தண்ணியும் இயற்கையிலேயே இருக்கு...

அதேபோல காகித உற்பத்திக்கான மூலப்பொருள் இயற்கையிலேயிருந்துதான் கிடைக்கிறது...தண்ணீர் மாதிரி காகிதத்தையும் இயற்கையிலேயே கிடைக்கச்செய்யலாமா?' என்றுகூட ஆராய்வதாக சொல்லியிருந்தார் அவர்.

கருத்து சொல்ல வாங்க...

4 Comments:

Blogger D The Dreamer said...

//அதேபோல காகித உற்பத்திக்கான மூலப்பொருள் இயற்கையிலேயிருந்துதான் கிடைக்கிறது...தண்ணீர் மாதிரி காகிதத்தையும் இயற்கையிலேயே கிடைக்கச்செய்யலாமா?' என்றுகூட ஆராய்வதாக சொல்லியிருந்தார் அவர்//

அப்படி பாத்தா அந்த ஆஸ்திரேலியர் சாப்பிட்ட தோசையில் உள்ள மூலப்பொருட்களும் தான் இயற்கையில கிடைக்குது. அதனால தோசைய இயற்கையா கிடைக்க செய்ய முடியுமா?

நண்பரே:
Nanotechnology மற்றும் nanosciences ஆகிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஆனால்,நீங்கள் குறிப்பிடும் வகையில் அல்ல. உங்களுக்கு Nanotechnology எவ்வளவு பரிச்சயமென்று எனக்கு தெரீயாது, ஆனால் இதுபோன்ற தளங்களில் எழுதும் போது ஆராய்ந்து எழுதுவது நல்லது. Nanotechnology-ஐ சர்வலோக நிவாரணி ரேஞ்சுக்கு புகழுவதிலும் எனக்கு உடன்பாடில்லை/ ஏனென்றால், நாம் கடக்கவேண்டிய தூரம் அதிகம்.

9:09 PM  

Blogger கார்த்திகேயன் said...

தோசையும் பேப்பரும் இயற்கையிலேயே கிடைப்பது பற்றி யோசித்து கொண்டிருப்பது வீண்தான். ஆனால், இயற்கையை மிஞ்ச எவராலும் முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த காலம்போய் இதெல்லாம் சாத்தியமோ என்று வருகிற போது, ஆச்சிரியம் ஏற்படத்தானே செய்கிறது. இன்னும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ என்ற ஆவலும் உண்டாகிறது...

//உங்களுக்கு Nanotechnology எவ்வளவு பரிச்சயமென்று எனக்கு தெரீயாது//

நேனோவில் இப்பொழுதுதான் ஒரு படி எடுத்துவைத்திருக்கிறேன். நான் அவ்வப்போது கற்றுக்கொண்டதையெல்லாம் தொடர்ந்து பதிவிட்டுகொண்டிருக்கிறேன்... ஒரு பதிவாக consolidated-ஆக, ஒரு விஷயத்தை தர கொஞ்சம் நாளாகலாம்.

//Nanotechnology மற்றும் nanosciences ஆகிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். நீங்கள் குறிப்பிடும் வகையில் அல்ல.//

நேனோவிற்கு இங்கே கணினியில் உள்ள வரவேற்பை விட மருத்துவத்துறையில்(உதாரணத்திற்கு, கேன்சர்) அதற்கு சற்று அதிகமாகவே வரவேற்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

அதனால், அது முக்கியமில்லை என சொல்லமுடியாது.(தொழில்முறை ஆராய்ச்சிகளை விடுங்கள். கேன்சர் ஒழிப்பு கூடவா முக்கியமில்லை?)

கண்டிப்பாக, இன்னும் நேனோவில் நாம் நிறைய கடக்கவேண்டும் என்பது உண்மைதானுங்க...
:-)

அன்புடன்
கார்த்திகேயன்

9:58 PM  

Blogger D The Dreamer said...

//Nanotechnology மற்றும் nanosciences ஆகிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். நீங்கள் குறிப்பிடும் வகையில் அல்ல.//

நேனோவிற்கு இங்கே கணினியில் உள்ள வரவேற்பை விட மருத்துவத்துறையில்(உதாரணத்திற்கு, கேன்சர்) அதற்கு சற்று அதிகமாகவே வரவேற்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

அதனால், அது முக்கியமில்லை என சொல்லமுடியாது.(தொழில்முறை ஆராய்ச்சிகளை விடுங்கள். கேன்சர் ஒழிப்பு கூடவா முக்கியமில்லை?)//

I meant making paper from the natural resources thingy that you had mentioned, which was absurd. Being a researcher myself in this area, I would never dispute the advantages that Nanoscience and Nanotechnology has to offer to humans.

2:27 AM  

Blogger கார்த்திகேயன் said...

நன்று. காகித உற்பத்தி எனது கருத்தல்ல என்றாலும், இங்கே ஆராயாமல் குறிப்பிட்டமைக்காக வருந்துகிறேன்...(காரணம் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால் அவ்வளவு நம்பிக்கை)

மேலும் தங்களுடைய ஆராய்ச்சி பற்றி சொல்லக்கூடுமானால் பெரிதும் உதவியாக இருக்கும்...

நன்றி

கார்த்திகேயன்

3:05 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home