(54) திருட்டிலிருந்து செல்போனை காப்பாற்றுவது எப்படி?

பஸ்சில் செல்போனைத் தொலைப்பவர்கள் மற்றும் திருட்டுக்கொடுப்பவர்களுக்கு சில உருப்படியான(மற்றும் உருப்படாத) யோசனைகள் இதோ:

  • செல்போனை வைப்ரேஷனில் இல்லாமல், ரிங்டோனை வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை தொலைந்தால், வேறொரு செல்போன் மூலமாக கால் பண்ணி, 'போன் பக்கத்தில்தான் இருக்கிறதா' என தெரிந்துகொள்ளலாம்.


  • காலை அவசரத்தில், குளிக்க மறந்துட்டீங்களா கவலையே படாதீங்க... எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், பஸ்சில் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்.
    அதோடு, ஏதாவது அழைப்பு வந்தால், பிளக்க பேசுங்கள். மிச்சமீதி இருக்கிறவர்களும் ஓடிவிடுவார்கள். அப்புறம் என்ன கவலை?


  • சட்டை/பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைக்கும் பழக்கமுள்ளவர்கள், பாக்கெட்டில் போனை செங்குத்தாக வைக்காமல், படுக்கை வசமாக வைத்துக்கொண்டால், அவ்வளவு சுலபமாக 'சுட்டுவிட' முடியாது.


  • ஒரு கார்கோவை மாட்டிகொண்டு, அதன் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு பொம்மை செல்போனை வைத்துக்கொள்ளவும். உண்மையான செல்லை எளிமையாகவும், போலி போனை பந்தாவாகவும் வைத்துக்கொண்டால், திருடன் எதைத் திருடுவது என்று குழம்பிப்போகக்கூடும்.


  • ரங்கநாதன் தெருவில், முப்பது ரூபாய்க்கு கிடைக்கும் 'சிலிக்கோன்' உறையை வாங்கி மாட்டிகொண்டால், இரட்டை பிரயோஜனம் உண்டு. அந்த இரண்டாவது உபயோகம், எளிதாக செல்போனை பாக்கெட்டிலிருந்து உருவமுடியாது.


  • ஒரு ரோப் அல்லது கிளிப்ட் டேக்(ஒரு முனையில், சட்டையோடு பொருத்திக்கொள்ள கிளிப் இருக்கும்) வாங்கிப்பயன்படுத்துவது சாலச்சிறந்தது.


  • நம்மைத்தவிர வேறுயார் தொட்டலும், அலாரம் அடிக்கிற இன்டெலிஜண்ட் போன் வைத்துக்கொண்டால்,திருடன் போனை தொட்டவுடனே பிடித்துவிடலாம்.(அப்புறமென்ன, 'தொட்டால் பெல் அலறும்...' என்று தலைவரின் 'படகோட்டி' பாட்டை பாடிக்கொண்டே ரெண்டு போடுபோடவேண்டியதுதான்)


  • அடிக்கடி 'உள்ளே வெளியே' செய்யாதீர்கள். தொடர்ந்து போன் வரும் என்பதாகத்தெரிந்தால், போனை பாக்கெட்டில் வைக்காமல், கையிலேயே வைத்துக்கொண்டு, போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதுபோல வைத்துக்கொண்டிருங்கள்(கேம் விளையாடலாம், எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருக்கலாம்). உங்கள் கவனம் முழுவதும் செல்போனில் இருப்பதால், யாராவது தொடுவார்கள்?


  • நாமே திருடன் போல (மதன் கார்ட்டூனில் வருவது போல) கெட்டப்பில் இருந்தால், அருகில் யாரும் வரமாட்டார்கள்.


  • இவ்வளவையும்மீறி செல்போன் தொலைந்துவிட்டால், அதற்காக வருந்திக்கொண்டிருக்காமல், செய்யவேண்டிய சில விஷயங்கள்...சிம்கார்டை வேறுயாரும் சமூகவிரோதமாக பயன்படுத்துவதற்குமுன் தடைசெய்யவேண்டியது... முன்னேற்பாடாக, அனைத்து போன் நம்பர்களையும் குறித்துவைத்திருந்த சிறுகுறிப்பேடுகளை பயன்படுத்துவது...


  • ஆமா, எதற்காக செல்போன்? அது இல்லாமல் வாழவே முடியாதா? அதனால...நான் சொல்லவர்றது என்னான்னா...இருக்கிற இந்த 'நிம்மதியின்மையை' விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியாக இருங்கள்.(பல டெலிமார்க்கெட்டிங் கால்களிலிருந்தும், forwarded எஸ்.எம்.எஸ்-களிலிருந்தும் எஸ்கேப்)


  • (ஒரு முக்கியமான விஷயம், தடியெழுத்தில்(bold) இல்லாத குறிப்புகள் பின்பற்றுவதற்கானது அல்ல)

    9 Comments:

    Blogger கோவி.கண்ணன் said...

    //காலை அவசரத்தில், குளிக்க மறந்துட்டீங்களா கவலையே படாதீங்க... எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், பஸ்சில் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்//
    ம்.. சொந்த அனுபவா ?

    செல்போனில் கிளி பேசும் ரிங்டோனை வைத்துக் கொள்ளலாம், அப்போது யாராவது எடுக்க வந்தால் 'திருடன் திருடன்' என்று காட்டிக் கொடுத்துவிடும்

    12:24 AM  

    Blogger ரவி said...

    இத்தை மின்னாடியே சொல்லுறதுக்கென்ன அப்பு...47D பஸ்ஸுல என் செல்லை தொலைச்சி இருக்கமாட்டேன் இல்லையா...

    என் சொந்தக்கதை சொல்லுறேன் கேளுங்க...

    கி.பி 2000 ஆண்டு அப்படின்னு நினைக்கிறேன்..சென்னையில் அதிக செல்போன் புழங்காத நேரம்...ஆண்டனோவுடன் கூடிய - இன்கம்மிங் சார்ஜ் ஆகக்கூடிய - பேனாசோனிக் போன் வைத்திருந்தேன்..(எங்க அப்பாவிடம் சுட்டது)...

    ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்..பஸ்ஸுல அவ்வளாவா கூட்டம் இல்லை..எஸ்.ஆர்.சி காலேஜ் பக்கம் நல்லதா நாலு பிகர் பஸ்ஸுல ஏறுச்சி...நமக்கு தான் சீன் போடலனா உடம்பு தாங்காதே...

    விளையாடியது விதி...செல்லை எடுத்து (கால் எதுவும் சத்தியமா வரவில்லை) அப்படியே பந்தாவா ஒரு லுக்கு விட்டுட்டு - மேல் பாக்கெட்டுல போட்டேன்...

    அப்பத்தான் கடைசியா பாத்தது...அந்த நடவடிக்கையால் பிகர்களின் கவனத்தை ஓரளவு திசை திருப்ப முடிந்தது...ஸ்டாப் வந்தவுடன் இறங்கி பாக்கெட்டை தடவி பார்த்தால் - போயே போச்சு...செல்லு கானாமே போச்சு...

    ஆட்டோக்காரன் ஒருவனிடம் வண்டியை துரத்தச்சொல்லி 50 ரூ ஆட்டோ சார்ஜ் போனது தான் மிச்சம்..ஆட்டோவாலா சொல்லியபடி டிப்போவுக்கே போய் பார்த்தேன்..

    கண்டக்டர் சொன்னாரு...அது ஆறிப்போயிட்டிருக்கும் தம்பி...இப்ப வந்து தேடுற..(ரிலையன்ஸ் போன் பேசினா சூடாகும் என்று கணித்த தீர்க்கதரிசி)

    அப்புறம் என்ன - செல்போனை மேல்பாக்கெட்டுல வைக்கிறது இல்லை என்று முடிவுசெய்தேன்..

    1:43 AM  

    Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

    ///
    ஒரு கார்கோவை மாட்டிகொண்டு, அதன் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு பொம்மை செல்போனை வைத்துக்கொள்ளவும். உண்மையான செல்லை எளிமையாகவும், போலி போனை பந்தாவாகவும் வைத்துக்கொண்டால், திருடன் எதைத் திருடுவது என்று குழம்பிப்போகக்கூடும்
    ///

    நல்ல யோசனை...

    நல்லாதான் எழுதுறீங்க....

    3:02 AM  

    Blogger Karthikeyan said...

    நன்றி கோவி. கண்ணன் சார், செல் தொலைத்த சோகமான அனுபவம் மட்டும்தான் என்னுது...(பின்னே? உண்மையை அவ்வளவு ஈஸியா ஒத்துக்கவமோ? :)

    அன்புடன்
    கார்த்திகேயன்

    3:03 AM  

    Anonymous Anonymous said...

    ஏனுங்க!
    செல்போனை வாங்கி ;வீட்டில் பத்திரமா? அலுமாரியில் வைத்துப் பூட்டுப் போடக்கூடாதா? களவிலிருந்து காக்கத்தான்!
    யோகன் பாரிஸ்

    3:21 AM  

    Blogger Karthikeyan said...

    ஆகா... சரி விடுங்க ரவி... போனது போனதுதான்.

    ரொம்பவும் வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா, நம்மல 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்து'ல சேத்துக்கமாட்டாங்க்ய...

    (word verificationஐ எடுத்துவுட்டுட்டேன்.
    மிக்க நன்றி ரவி)

    அன்புடன்,
    கார்த்திகேயன்.

    3:24 AM  

    Blogger Karthikeyan said...

    வாங்க குமரன் சார்.

    ஏதோ அனுபவம்... அவ்ளோதான்...

    :)

    மிக்க நன்றி

    அன்புடன்
    கார்த்திகேயன்

    3:25 AM  

    Blogger Karthikeyan said...

    ஆகா...அருமையான ஐடியா ஜோகன் சார். இது எனக்கு அப்பவே தோணாம போச்சே... என் செல்போனை காப்பாத்தியிருக்கலாமோ?

    :))

    3:30 AM  

    Anonymous Anonymous said...

    எழுதிக்கொள்வது: Karthikeyan

    இது ஒரு சோதனை பின்னூட்டம் நன்றி.

    14.12 1.7.2006

    1:56 AM  

    Post a Comment

    Subscribe to Post Comments [Atom]

    << Home