கலைஞரும் சிலேடையும்...
பல சர்ச்சைக்குறிய சிலேடைகளுக்கிடையே தமிழ்வருடப்பிறப்பன்று சன் டீவி கவியரங்கத்தில் கலைஞர் சொன்ன அரசியல் சாயம் இல்லாத ஒரு சின்ன சிலேடை, சுவாரஸியமானது...
மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகனிடம் பார்வையாளர் ஒருவர் கேட்கிறார்...
"இன்னும் ஒரு 'பத்துப்பாட்டு' பாடுக"
"பத்துப்பாட்டு பாட 'எட்டுத்தொகை' அதிகம் தருவீரோ?"
"எட்டுத்தொகை என்ன...'ஐங்குறுநூறு'-ஏ தருகிறேன்"
"இல்லையப்பா எனக்கு...'அகத்தில் நானூறும், புறத்தில் நானூறும்' வேண்டும்..."
அதாவது அவன் கேட்டது, கணக்கில் நானூறு, கருப்பில் நானூறு...
2 Comments:
//"எட்டுத்தொகை என்ன... 'ஐங்குறுநூறு'-ஏ தருகிறேன்"
இந்த இடத்தில் குறுந்தொகை விட்டுப்போய் விட்டது.
"இவ்வளவு குறுந்தொகையாகக் கேட்டுவிட்டீரே! ஐங்குறுநூறு-ஏ தருகிறேன்."
நன்றி
கமல்
கமல் சார், சரியான நேரத்தில் சொன்னமைக்காக உங்களுக்கு ஒரு அகநானூறு...
:-)
அன்புடன்
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home