மாயமில்லே...மந்திரமில்லே...

மின்குழு அஞ்சலில் வந்திருந்த இந்த தொடுப்பு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

அது ஒரு மாயக்கணக்கு...
ஒரு பக்கம் மாயக்கண்ணாடி உருண்டை...(அதில்தான் நாம் நினைத்திருந்த எண்ணின் குறியீடு தெரியப்போகிறது)
மறுபக்கம் நாம் நினைத்துக்கொள்வதற்கான எண்களும், அதன் குறியீடுகளும்...

ஏதாவது ஒரு இரட்டை எண்ணை நினைத்துக்கொள்ளவேண்டும். அதில் உள்ள இரண்டு எண்களையும் தனித்தனியாக பிரித்து, கூட்டிக்கொள்ளவேண்டும்... கூட்டி வந்த விடையை உண்மையான எண்ணோடு கழிக்கவேண்டும். விடையாக வந்த எண்ணின் அருகில் என்ன குறியீடு என்பதை பார்த்துக்கொண்டு... கண்ணாடி உருண்டையில் கிளிக் செய்ய.....அட !

(உ.ம்) நினைத்த எண்: 45. (4+5=9) இந்த 9-ஐ, 45-லிருந்து கழித்தால், 36 வருகிறது. 36க்கு அருகில் என்ன குறியீடு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு, கண்ணாடி உருண்டையை கிளிக் செய்யவும்...(மாந்தரீக சவுண்ட் எஃபக்ட் வேறு)

இங்க இதப்பார்த்துட்டு எப்படி வேலை செய்யுதுனு யாராவது விளக்கினா தேவலை... (எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா. ரூம்போட்டு உக்காந்து யோசிப்பானுங்களோ?)

2 Comments:

Blogger J.S.ஞானசேகர் said...

நீங்கள் நினைத்துக் கொண்ட இரண்டிலக்க எண்ணை ab என வைத்துக் கொள்வோம். நீங்கள் குறியீடு தேடும் எண்ணை cd என வைத்துக் கொள்வோம். எனவே,

cd = (10a+b) - (a+b) = 9a

எனவே, நீங்கள் குறியீடு தேடும் எண் எப்போதுமே ஒன்பதின் மடங்காக மட்டுமே அமையும். இது எல்லா எண்களின் தலைவிதி.

ஒரே எண்ணை இரண்டு முறை தொடர்ந்து சோதித்துப் பாருங்கள். குறியீடு மாறுவதைக் கவனிக்கலாம்.

நீங்கள் ஒரு எண்ணைக் கூட நினைக்காமல், வெறுமனே கோளத்தைக் கிளிக் செய்தாலும், 0 அல்லது 9ன் மடங்கில் அமையும் எல்லா எணக்ளுக்கும் ஒரே குறியீடு அமைந்திருக்கும்; அதுவே விடையாகவும் வரும்.

-ஞானசேகர்

7:24 AM  

Anonymous Anonymous said...

each time you click the ball, the symbol changes and all multiples of 9 and 0 have the same symbol.

Gnanasekar has got the answer correctly.

8:08 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home