பேனாச்சுமை... (ஒரு கதை)

பஸ்சில் சரியான கூட்டம்...
நிற்கக்கூட இடமில்லை...
தப்பித்தவறி ஒரு காலைத்தூக்கிவிட்டால் போச்சு, அந்த இடமும்போய் ஒரு காலிலேயே நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும் போலிருக்கிறது...
ஏதாவது நிறுத்ததில் நிறைய பேர் இறங்குவார்கள் என்று பார்த்தால், மேலும் மேலும் ஏறத்தான் செய்கிறார்கள்...

நண்பன் ரவி, முன்பக்கம் ஏறியிருந்தான். அவனையும் கூட்டத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை...

"படில நிக்காத உள்ள ஏறிவா...சீட்டு எடுத்துட்டு உள்ள போ...எங்கம்மா போகணும்?" என்று நீலக்கலர் கண்டக்டர் கூவிக்கொண்டிருந்தார்...

அப்போது,"எக்ஸ்யூஸ்மீ...கொஞ்சம் பேனா தரமுடியுமா? ப்ளீஸ்!" பக்கத்திலிருந்த செல்போன்காரன் கேட்டான்...காதில் செல்போன் உயிரோடு.

நான் பேனா தந்ததும்,"ம்...சொல்லுங்க! நம்பர் எட்டு,..." உள்ளங்கையிலேயே எழுதத்தொடங்கினான்...

"பாஸ்...கையில் எழுதாதீங்க...பேனா வீணாயிடும்!"

'சரிசரி' என்பதுபோல் தலையாட்டியபடி, மேலும் எழுதத்தான் செய்தான்.

அங்கிருந்து நண்பன், "டேய் மச்சான்! ட்ரேட் சென்டர் வந்திடுச்சு... அப்பிடியே படிப்பக்கம் நகரு" என்று சைகை செய்தான்...

இராமாபுரத்தை அடுத்து எல்.அன்.டி-யில் இறங்கவேண்டும்...

'பேனா தேவை...ஆனால் தரமாட்டான் போலிருக்கிறதே...!!!' ஐடிபிஎல்-லில் பேருந்து நின்றது...

"ஐயோ என்ன பண்ணிட்டிருக்க? போ படிக்கிட்ட!" இந்த நண்பன் வேறு விவரம் புரியாமல்...

இவன் எழுதிவிட்டு பேனாவைத் தந்தால், நகரலாம் என்றிருந்தால், தருகிற வழியைக்காணோம்... இன்னும் பேசிக்கொண்டிருந்தான்...

எரிச்சலாய் வந்தது...
ஒரு பேனா எடுத்துவரமாட்டார்கள் இவர்கள்...
சட்டைப்பையில் கனம் தாங்காது...
அக்கம்பக்கத்தில், என்னைமாதிரி எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால், வாங்கி சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இவர்களுக்கெல்லாம்...

'சரி படிக்குப்போய்விடுவோம். அதற்கப்புறம் வாங்கமுடியுமா பார்க்கலாம்...' என யோசித்தபடியே கிடைத்த இடைவெளியில் காலை எடுத்து வைத்ததும், பக்கத்து பெருசு, "யோவ், செருப்புதான் போட்டிருக்கியா இல்ல லாடம்கீடம் கட்டிருக்கியா, எருமமாடாட்டம் இந்தமிதி மிதிக்கிற?"

வந்த கோபத்திற்கு, அந்தாளை ஒரு வழி பண்ணியிருக்கவேண்டும்...
நண்பன் அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்....

வேறு வழியில்லை நேரடியாக கேட்டுவிடவேண்டியதுதான்...
ஆனால் அவனோ கூட்டத்தில் நகர்ந்து நகர்ந்து முன்னால் போய்விட்டிருந்தான்...

அப்பொழுதுதான் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்தது... இராமபுரம் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி சுதாரிப்பதற்குள் போயேவிட்டான்...

'போச்சு போயே போச்சு... இனிமேல் பேனாவே எடுத்துவரக்கூடாது...அப்படியே எடுத்துவந்தாலும் எந்தப்பயலுக்கும் குடுக்கக்கூடாது...'

பேருந்து மெல்ல நகர்ந்து, எல்.அன்.டி-யில் நின்றது...தன்னை நொந்துகொண்டு இறங்கப்போனபோது,"எக்ஸ்யூஸ்மீ! இந்த பேனா ஒங்களுதா? ஒங்ககிட்ட குடுக்கச்சொல்லி என் ஃபிரெண்ட் தந்தான்",
பேனாவை வாங்கியபின்,
"என்னாச்சு ஒங்க பிரெண்டுக்கு, அவசர அவசரமா எறங்கிப்போனாரே?"

"அவனுக்கு ஒண்ணும் இல்ல...ஆனா..."

"ஆனா...என்ன?"

"அவங்க பேரண்ட்ஸ், மெரினாவுக்கு காலைல வாக்கிங் போயிருந்தாங்களாம்... திடீர்னு ஒரு பெரிய அலை வந்து..." அதற்குமேல் சொல்லமுடியாமல், துக்கத்தால் ஸ்தம்பித்து நின்றான்...

சட்டைப்பையில் பேனா கனத்தது...

(இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்தது...)

11 Comments:

Blogger Unknown said...

thalaiva,
nalla irukku kathai.

een romba nala valaipathivu pakkam kanalai?college velai busya?ippa summer vacationa?paper thiruththa pookalaiya?

8:39 PM  

Blogger Karthikeyan said...

மிக்க நன்றி செல்வன்...நீங்கள் தருகிற ஊக்கத்திற்கும்...(ப்ரொபைலில் தெலுங்கு கீரோ படம் ஏன்?)

காலேஜ், வெக்கேஷன், பேப்பர் திருத்துதல்...
அட, எப்படி இவ்ளோ கரெக்டா சொல்றீங்க? விரிவுரையாளரா முன்னனுபவம் ஏதாவது இருக்குங்களா?

அன்புடன்
கார்த்திகேயன்

9:32 PM  

Blogger ரவி said...

நல்ல கதை...இவ்வளோ நாலா ஏன் ரிலீஸ் பண்ணல ?

ரவி

இந்த வேர்டு வெரிபிகேஷனை தூக்கி விடலாமே...

10:25 PM  

Blogger Unknown said...

ஆமாங்க கார்த்தி.நான் நெட் ஸ்லெட் எழுதி நொந்து நூலாபோன ஒரு முன்னாள் விரிவுரையாளன் தான்.நீங்க எஞ்சினியரிங்கல எந்த டிபார்ட்மண்ட்?நான் மேனேஜ்மன்ட் துறை விரிவுரையாளர்.பாலகிருஷ்ணா படம் போட்டது சும்மா ரவுசுக்குதான்

11:46 PM  

Blogger Suka said...

கார்த்தி..

நாங்க பரிட்சைல கதை எழுதினாலும் கலைக்கண்ணோட பார்த்து மார்க் போடுவீங்க தானே.. :)

கதை அருமை !

சு
கா

1:47 AM  

Blogger Suka said...

கார்த்தி..

நாங்க பரிட்சைல கதை எழுதினாலும் கலைக்கண்ணோட பார்த்து மார்க் போடுவீங்க தானே.. :)

கதை அருமை !

சு
கா

1:47 AM  

Blogger Karthikeyan said...

செல்வன் சார்...நான் கணினித்துறை விரிவுரையாளன்... ஆனால் இப்பொழுது இல்லை. நிரல் உலகில்(software development) அடியெடுத்து வைக்கிறேன்...
நீங்கள் எந்த கல்லூரி? நெட் ஸ்லெட் என்பதை பார்த்தால் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... என்ன இருந்தாலும், விரிவுரையாளனாக இருப்பது ஒரு நல்ல விஷயம்தான், இல்லையா? நன்றி சார்...

அன்புடன்
கார்த்திகேயன்

2:02 AM  

Blogger Karthikeyan said...

ரவி சார்... பழைய காலத்தில் நான் எழுதிய டைரிகளை புரட்டிக்கொண்டிருந்தபோது, இது கிடைத்தது... அதனால்தான் லேட்...:))

இப்போ உள்ளதைவிட சின்ன வயசில் கொஞ்சம் அதிகமாகவே எழுதியிருக்கிறமாதிரி தோன்றுகிறது...

நன்றி.
அன்புடன்
கார்த்திகேயன்

3:16 AM  

Blogger Unknown said...

எதிர்பாராத முடிவுதான் என்பதை எதிர்பார்த்தேன்..ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை..

அன்புடன்
அருள்.

9:55 AM  

Blogger Karthikeyan said...

வாங்க சுகா சவுக்கியமா!

பரீட்சை பேப்பர் திருத்தும்போது, 'கீல' ('கீழே' இல்ல key-ல) இல்லாத விஷயத்திற்கு மார்க் போட்டா நம்மள வூட்டுக்கு அனுப்பிடுவாங்க... அதனால ப்ளாக்-ல மட்டும் தான் கதை எழுதுவதும், இரசிப்பதும்...

:))

அன்புடன்
கார்த்திகேயன்

10:46 PM  

Blogger Karthikeyan said...

நன்றி அருட்பெருங்கோ,

உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

:))

அன்புடன்
கார்த்திகேயன்

10:58 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home