ஆசிரியன் என்பவன்...

ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு என் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சில விஷயங்கள் அடிக்கடி சொல்வார்...

"a Teacher must know...
Something about Everything and
Everything about Something..."
(இதில் நான் எந்த வகை?)

மேலும்... "a teacher must encourage but not discourage...

Encourage-னா 'ஊக்கு' விக்கிறது, Discourage-னா 'பின்'வாங்குறது..."

2 Comments:

Blogger சீமாச்சு.. said...

ஆசிரியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கூறியதைக் கேளுங்கள்.

தாயென அன்பு செய்து
தந்தைபோல் பரிந்து சொந்தச்
சேயென அணைத்துப் பேசிச்
செவ்விய அறிவு கூறித்
தூய நன்னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமுளோனே,
'ஆசான்' என்று அழைக்கத்தக்கோன் !!!

தப்பிதம் கண்டபோதும்
தண்டிக்க முனைந்திடாமல்,
நட்புடைத் தோழன்போல்
நயமாக எடுத்துக்காட்டி,
ஒப்புரவாகப் பேசி
உள்ளத்தை உருக்கவல்ல
அப்பெருந்தகைமையே நல்
ஆசானுக்கு அமைய வேண்டும்!!

என்றென்றும அன்புடன்
சீமாச்சு...

http://seemachu.blogspot.com

8:06 PM  

Blogger Karthikeyan said...

நன்றி சீமாச்சு,

உங்கள் அறிவுரையின் பேரில் 'எயிட்ஸ் பற்றிய பதிவை' எடுத்தாயிற்று...

நானும் இது போன்ற விஷயங்களைச்சாடுவதற்காகத்தான் அதை கொடுத்திருந்தேன்...

வந்து படிக்கிறவர்களுக்கு, அது எப்படி போய்ச்சேரும் என்பது தெரிந்திருக்கிவில்லை...
மன்னிக்கவும்...
மற்றபடி, வதந்தியை பரப்புவது என் நோக்கமல்ல.(அதுவும், இதுபோன்ற மாவூடகத்தில்)

நல்ல நோக்கத்துடன் செயல்படத்துவங்கியுள்ள எனக்கு, சரியான நேரத்தில் இதை உணர்த்திய சீமாச்சுவிற்கு என் நன்றி...

9:47 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home