(58) பிபிசியும், ஆள்மாறிப்போன பேட்டியும்..
நிஜத்தில் நிகழ்கின்ற சில வேடிக்கையான நிகழ்வுகள், திரைப்படங்களில் வருவதைக்காட்டிலும் அதிக சுவாரஸியமானவை.
இங்கே பாருங்கள்....
ஆப்பிள் நிறுவன வல்லுனரை பேட்டி எடுப்பதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பெயரில் வராண்டாவில் உட்கார்ந்திருந்த ஒரு டாக்ஸி டிரைவரை (தெரியாமல்) கூட்டிவந்து, மைக் பொருத்தி, லைவாக பேட்டியெடுத்து...
உண்மையான வல்லுனர் இதை டிவியில் பார்த்து அதிர்ந்து... பிபிசியின் மீது வழக்கே போட்டுவிட்டார்.
தான் வந்திருப்பது தவறான பேட்டி என்பது கூட தெரியாமல் இந்த ஆசாமி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இருக்கட்டும்... (அவர் அழைக்கப்பட்டிருந்தது ஒரு வழக்கு சம்பந்தமான பேட்டிக்காக... இவர் வந்திருந்தது வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக)
பேட்டியின் தொடக்கத்தில், நியூஸ் ரீடரம்மா தன்னை 'வல்லுனர்' என்று சொல்கிறபோது, இவர் முகத்தில் தோன்றுகிற உணர்ச்சிகளை... இந்த நூற்றாண்டில் எந்த சிறந்த நகைச்சுவை படத்திலும் பார்த்திருக்கமுடியாது.
இங்கே அந்த வீடியோ
ஐயாதான் இப்போ திமிங்கிலம் (எல்லா பேட்டியிலும்)
யூ-ட்யூபில் Guy Goma என தேடல் போடுங்கள்
4 Comments:
சுவாரஸ்யமானது
அவர் எக்கெளண்டன்ட் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக வந்திருந்ததாகச் சொல்கிறார்.
இப்போது இவரை வைத்து மற்றவர்கள் நிகழ்ச்சி செய்கிறார்கள்.
பல தொலைக்காட்சிகள் இப்போது உண்மையாகவே இவரை நேர்முகம் காண்கின்றன.
கார்த்தி ரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க!!
இந்த வீடியோவ எடுத்துப் போட்டதுக்கு நன்றி!!
அன்புடன்,
சீமாச்சு...
நன்றி சந்திரவதனா மேடம்,
கோபாலன் சார், அட இப்பிடியெல்லாம் கூட நடக்குதா? ஆஸ்பத்திரியில...(கைப்புள்ள சொல்றார் கேளுங்க-"நல்லவேளை ஆள்மாத்தி ஆபரேஷன் பண்றாங்க. ஆபரேஷனையே மாத்துனா என்னாகிறது?")
;)
சீமாச்சு சார்...நானும் ரொம்ப நாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்த காஸ்யம் இது...
அனானி நண்பர் அவர்களுக்கு, மற்றொரு ஆங்கில வலைபதிவில் சொல்லியிருந்தது இன்னும் சுவாரஸியமானது...(மேலும் விவரங்களுக்கு: கூகிள்)
நல்ல நகைச்சுவையை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி...
அன்புடன்
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home