சென்னை புத்தகக்காட்சியில்...

(பத்ரி அவர்களின் 'விகடன்,குமுதம்,பிறர்' படித்தபின் பதித்தது)

கிழக்குப்பதிப்பகத்தில் மற்றும் மிகச்சில ஸ்டால்களில் மட்டும்தான் புத்தகங்கள் இருத்திவைக்க நடுவில், மர அலமாரி போல இருந்தது...

ஆனால், பெரும்பாலான ஸ்டால்களில், இப்படியில்லாமல் 'புத்தகக்கோட்டை' கட்டிவைத்திருந்தார்கள். இரசிக்கும்படியாக இருந்தாலும், மூச்சுத்திணற வைக்கும் 'மாநகரப்பேருந்து கூட்டம்போல்' இருந்த நெரிசலில் தடுக்கி, 'கோட்டை' கலைந்து விழுந்து அந்த இடமே பேஜாராகியது...

ஒருவேளை, இதனால்தான் என்னவோ விகடனில் அப்படி புத்தகங்களை கொட்டிவைத்திருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும், எப்பேற்பட்ட கூட்டநெருக்கடியாக இருந்தாலும் கிடைக்கிற சந்துபொந்தில் நின்றுகொண்டு, 'படித்துப்பார்த்துதான்' வாங்குவேன் என்று அடம்பிடிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு, பாலிதீன் பாக்கெட்டில் 'பத்திரப்படுத்தப்பட்ட' நூல்களை வாங்க முடியவில்லை...('கதாவிலாசம்' மற்றும் வேறு சில ஸ்டால்களில் கவிதை தொகுப்புகள்)

அடுத்தது...
சாதாரணமாக எல்லா ஸ்டால்களிலும் விற்பனைப்பிரதிநிதிகள் இருந்தார்கள். விகடனில் (உள்ளே) இல்லை. தேவையில்லை என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால், எல்லா தலைப்புகளும் நன்கு பரிட்சயமானவை. அதோடு, அந்த மகாகூட்டத்தின் நடுவில் கடைக்காரர்கள் வந்துநின்று பேசிக்கொண்டிருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அவர்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக பில் போட்டிருந்திருக்கலாம். 'என் நம்பர் எப்போ வருமோ' என்று எக்ஸாம் ரிசல்ட் போல காக்க வேண்டியிருந்தது.

குமுதத்தின் எண்ணமே வேறு...அங்கு போய் "பாஸிட்டிவ் பாயிண்ட் இருக்கா?" என்று கேட்டால், "ப்ரிண்டிங்கில் இருக்கு. மூணு நாள்ல வரும்" என்றார்கள் இறுக்கமாக. கேள்விப்படாத தலைப்புகளை வைத்துக்கொண்டிருந்தார்கள். பிரபலமாகாதவைகள் காட்சியில் இருந்தால் பிரபலமாகிவிடும் என்ற வியாபார கணக்கு, தப்பாகிவிட்டது. Hope they would recognize their negative point...

"எப்படியெல்லாம் இருந்த குமுதம்..." என்ற வாசகர்களின் பெருமூச்சுதான் கடைமுழுவதும். ("குமுதக்குதிரை ரேஸுக்கு எப்போ வரப்போகுது")

மற்ற நண்பர்கள் சொன்னதுபோல, சில்லறையின்றி சில இடங்களில் வாங்கமுடியவில்லை...இந்த சில்லறை(யில்லா?) பிரச்சனைக்குத்தீர்வு, கடனட்டைதான்...

என்னைப்போன்ற கடனட்டையில்லாத வாசகர்களுக்கும் உதவுகிற வகையில் நூல்களின் விலையை(தள்ளுபடிக்கப்புறம்) roundoff செய்துதந்தால் நன்றாகயிருக்கும்... :-)

ஆங்...அப்புறம்...இவ்ளோ பெரிய (மைதானம் கொண்ட) 'காயிதே'யை விட்டுவிட்டு, வேறு எங்கு நடத்தமுடியும் என்று நினைக்கிறீர்கள்...?

2 Comments:

Blogger விருபா - Viruba said...

வணக்கம் கார்த்திகேயன் அரசரெத்தினம்,

தமிழ் வாசகர்களுக்காக நாம் விருபா தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு ( www.viruba.com ) என்ற பெயரில் தமிழ்ப் புத்தக தகவல் தளம் ஒன்றை தைப் பொங்கல் அன்று ஆரம்பித்துள்ளோம்.

இன்றைய திகதியில் 253 தமிழ்ப் புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் அனைத்து தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் ஒரு பாவனையாளர் பெயரும் இரகசிய கடவுச் சொல்லும் வழங்கவுள்ளோம். இதன்மூலம் அனைத்து தமிழ்ப் பதிப்பகங்களும் தங்களுடைய தமிழ்ப் புத்தகங்களை விருபா தகவல் தளத்தில் இணைக்க முடியும்.

இங்கு நெரிசல் இல்லை, ஆனால் புத்தகத்தை புரட்டிப் பார்க்க முடியாது.

11:05 PM  

Blogger மாயவரத்தான் said...

போன வார குமுதத்திலே கண்காட்சியில் மிகவும் பரபரப்பாக விற்பனிஅயானதாக நான்கைந்து புத்தகங்களை எழுதியிருந்தார்கள். அதில் நாலு குமுதம் வெளியீடுகள்.

ஜோக்.

11:50 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home