ஒரு மன்னரின் கவலை...

ஒரு மன்னர் இருந்தார்.
அவருக்கு தீராத மனக்கவலை ஒன்று இருந்தது.
அது அவருடைய வழுக்கைத்தலை பற்றியது.
என்னசெய்தும் தலையில் முடி வளரமாட்டேன் என்கிறது...

அரண்மனை வைத்தியர்களுக்கெல்லாம் கெடு வைத்தார்...
("இன்னும் ஒரு மாதத்தில் மருந்து கண்டுபிடித்து கொண்டுவராவிட்டால் சிறைதண்டனை !!!")

எல்லா மருத்துவர்களும் கலங்கிக்கொண்டிருந்தபோது, வயதான ஒருவர் முன்வந்தார், "மன்னரிடம் என்னைக்கூட்டி போங்கள்"

மன்னரிடம் ஒரு தைலத்தை கொடுத்தார் பெரியவர்...
"மன்னா...இது மிகவும் சக்திவாய்ந்த தைலம்...இதை தினமும் காலையில் தலையில் தடவிவந்தால், கேசம் வளர்ந்துவிடும். ஆனால் ஒரு நிபந்தனை...இதை உபயோகப்படுத்தும்போது, எக்காரணம் கொண்டும் 'தேங்காயை' நினைத்து விடக்கூடாது!!!"

'நாம் என்றைக்கு 'தேங்காயை' நினைத்திருக்கிறோம் இன்றைக்குமட்டும் திடீரென நினைப்பதற்கு?'

மறுநாள்...

தைலத்தை கையில் எடுத்தார் மன்னர்..."மிக முக்கியம்...தேங்காயை நினைத்துக்கொண்டால் மருந்து வேலை செய்யாது..."

"ஆ...ஐயோ நினைத்துவிட்டேனே...வேறு வழியில்லை. நாளைக்குத்தான் பயன்படுத்தவேண்டும் !!!"

அடுத்தநாள்...

"இன்றாவது தேங்காயை நினைக்கக்கூடாது...அடச்சே!!!"
இவ்வாறே பலநாள் தொடர்ந்தது...

சற்றுநாளைக்கெல்லாம் 'தேங்காய் எண்ணை, இளநீர்,தேங்காய் பர்பி எல்லாம் கூட' ஞாபகத்திற்கு வந்தது.

தேங்காயைக் கண்டாலே வெறுக்க ஆரம்பித்தார் மன்னர். திடீரென ஒரு நாள்..."ஏன் இந்தத் தலைக்கு என்ன? தேங்காயை விட நன்றாகத்தானே இருக்கிறது ???!!!" என்று அவர் கருதினார்.

இது தோன்றியதற்குப்பிறகு மன்னரின் கவலை மறைந்தது.

(Courtesy: The Hindu - Young World)
* * * * * *

கதைசொல்லி: ஆகவே இதன் நீதி என்னவென்றால்...
பொதுஜனம்: என்ன...?
க.சொ: எப்பேற்பட்ட ஆளாக இருந்தாலும்...
பொ.ஜ: இருந்தாலும்...?
க.சொ: என்ன முயற்சி செய்தாலும்...
பொ.ஜ: செய்தாலும்...?
க.சொ: தேங்காயை மறக்கமுடியாது !!!
பொ.ஜ: புய்யாங்க...நீயும் உன் நீதியும்!!!

4 Comments:

Blogger ஏஜண்ட் NJ said...

//ஆகவே இதன் நீதி... தேங்காயை மறக்கமுடியாது !!!//

தேங்காய நெனச்சா, *யிரு பத்தின கவல வராதுங்கறீங்களா?!
:-)))

9:14 AM  

Blogger மரத் தடி said...

தேங்காயில் வழுக்கைதான் ருசி. தெரியும்ல..?

5:20 PM  

Blogger Karthikeyan said...

ஐயெயெ தலீவா(Agent 8860336 ஞானபீடம்)...என்ன இப்படியெல்லாம் சொல்லிக்கினுக்கிற?

மெய்யாலுமே நீதானா?
இல்லாங்காட்டி ஓ பேரச்சொல்லி வேறு யாராவது தட்டிவிட்டுக்கிறானுங்களா?

8:48 AM  

Blogger பரஞ்சோதி said...

ஆகா அட்டகாசமான கதையாக இருக்குதே, முன்பு மாம்பழம் என்று படித்த நினைவு.

தேங்காயா சொன்னதால் வழுக்கை, மொட்டை எல்லாம் உபயோகிக்க முடியுது.

11:05 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home