நிஜ ஸ்டால்

சமீபத்தில், அயோத்தியா மண்டபம் பக்கம் நானும் மற்ற இரண்டு நண்பர்களும் போயிருந்தோம்.

ஒரு நண்பர் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

'என்ன?' என்றபோது,
"இங்கு ஒரு போளி ஸ்டால், ரொம்ப நல்லா இருக்கும். அதான் தேடினேன்"

இன்னொரு நண்பர் சரியான ரவுசு பார்ட்டி...உடனே சொன்னார்,"யப்பா, ஏதாவது 'நிஜ' ஸ்டாலுக்குக் கூட்டிட்டுப்போங்கப்பா"

6 Comments:

Blogger Boston Bala said...

:-)

5:59 AM  

Blogger மணியன் said...

குறும் பதிவுகள் என்றாலும் குறள் போல் நச்சென்று இருக்கின்றன.

10:13 PM  

Blogger கார்த்திகேயன் said...

நன்றி பாலா மற்றும் மணியன்...

குறும் பதிவுகள் என்றாலும் குறள் போல் நச்சென்று இருக்கின்றன.

:-)

8:38 AM  

Blogger Jsri said...

:) உங்க நண்பர் தேடின போளி ஸ்டால் ஸ்டேஷன் ரோடுல- மேற்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னாலயே இருக்கு. அயோத்யா மண்டபம் கிட்ட இல்லை. :)

9:06 AM  

Blogger கார்த்திகேயன் said...

ஓகோ...'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சமான இடத்தில் தேடிய' கதையாகிவிட்டது...

போளி ஸ்டாலின் 'நிஜமான' இடத்தில் விட்டுவிட்டு, 'போலியான' இடத்தில், 'நிஜமாக' தேடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்...

;-)

8:06 PM  

Blogger நாமக்கல் சிபி said...

//இன்னொரு நண்பர் சரியான ரவுசு பார்ட்டி...உடனே சொன்னார்,"யப்பா, ஏதாவது 'நிஜ' ஸ்டாலுக்குக் கூட்டிட்டுப்போங்கப்பா"//

சரியான் குசும்பு பார்ட்டியாயிருப்பார் போல உங்க நண்பர்.

6:20 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home