"ஐயோ பேயீ..."
எங்கள் சண்முகா கல்லூரியில், பாலிடெக்னிக் மாணவர்கள் ரொம்ப சந்தோசமானவர்கள்...அவர்களது வெகுளித்தனத்திற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்...
அது தேர்வு நேரம்...
மறுநாள் பரீட்சை...அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும்.
ஒருவன் காலை 4.30க்கு அலாரம் வைத்து அறையின் மதிலில் எங்கோ வைத்துவிட்டான்...("பக்கத்தில் இருந்தால் (அலாரத்தின்) தலையிலடித்து விட்டு மீண்டும் தூங்கிவிடுவேன்")
இது தெரியாத அவன் அறை நண்பன் வேறொரு அலாரத்தில் காலை 5.00க்கு வைத்துவிட்டு படுத்துவிட்டான்...
காலை 4.30 மணிக்கு (ஒழித்து வைத்திருந்த) அலாரம் அடிக்க, இவன் 5.00 மணி அலாரத்தை அழுத்தினான். சத்தம் நிற்கவில்லை.
ஒன்றும் புரியவில்லை... அலாரத்தின் பாட்டரியை தனியாக எடுத்து பார்த்தான்...அலாரத்தை தனித்தனியாக கழட்டியும் பார்த்தான்...அலாரம் நின்றபாடில்லை...(அதுதான் மேலே இருக்கிறதே)
என்னவெல்லாமோ செய்தும் அலாரம் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது...
இவன் மனதுக்குள் ஒரு திகில்..."ஐயோ பேயீ..." என்று ஒரே அலறல்...அந்த பேயலறலில்தான், மற்றவன் (அந்த அலாரம் வைத்தவன்) விழித்தான்.
4 Comments:
:)) Nice!!
நன்றி தங்கமணி சார்...
மேலும் கருத்துக்கள் தரவும்
நன்றி...
மாணவர்களிடம் நடக்கும் இது போன்ற செய்திகள் விரிவுரையாளர்களையும் போய்ச் சேருகின்றது என்று இன்றுதான் தெரிகின்றது.
இல்லீங்க ராகவன் சார்...நான் அப்பொழுது (தஞ்சாவூர் சண்முகாவில் முதுகலை) மாணவன் தான்.
(பாலிடெக்னிக் மாணவர்கள் எங்களுக்கு அருகில் உள்ள காஸ்டலில் தங்கியிருந்தார்கள்)
ஒரு இரண்டரை வருடங்களாகத்தான் நான் 'விரிவுரையாளர்', 'சென்னைக்காரன்' எல்லாம்...
நன்றி எம்கே வான்மதிக்கும், ராகவனுக்கும்....
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home