(62) தேர்வுகளிலிருந்து கற்றுகொள்வோம் !!!

சின்னதும் பெரியதுமாக சுமார் 15 நேர்முகத்தேர்வுகள்...
எல்லாமே டாட்நெட் (தமிழில்: புள்ளிவலை?!!!) தொழில்நுட்பத்தின்
அடிப்படையில் அமைந்தவை...

சில நிறுவனங்களில் இருந்து தொலைதேர்வும்
(Telecon:டெலிபோன் இண்டர்வியூவுக்கு புதுப்பெயர்) செய்தார்கள்...

கலந்துகொண்டவை சில
நேர்முகத்தேர்வுகள்தான் என்றாலும்,
கற்றுகொள்ளக்கிடைத்தது மிக ஏராளம்...

எந்த தேர்வுக்கும்
தன்னம்பிக்கை குறைவால் பின்வாங்கவும் இல்லை..
சிறிய நிறுவனம் என உதாசீனப்படுத்தவும் இல்லை...

ஒவ்வொரு நிறுவனத்திலும் என்ன தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வது
நல்ல அனுபவமாக இருந்தது...

வகுப்புகளில், புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிட,
தேர்வுகளிலிருந்து கற்றுக்கொள்வது ஒரு இனிமையான
விஷயமாகயிருக்கிறது...

'எவ்ளோ கேள்வி கேட்டாலும் பொறுமையா
(ஓடாம) இருக்கானே...' என என்னுடைய
பொறுமையை மட்டும்(??!!!) வைத்து எனக்கு
ஒரு நல்ல இடத்தில் வேலையையும் தந்துவிட்டார்கள்...

கிடைத்த இடத்தை தக்கவைத்துகொள்வதற்கு
தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும்...

Labels: , , , ,

2 Comments:

Blogger வடுவூர் குமார் said...

பொருமை வேண்டும்..எல்லாம் பின்னால் தன்னால் வர உதவியாக இருக்கும்.

6:25 AM  

Blogger Karthikeyan said...

கருத்துக்களுக்கு நன்றி குமார் அவர்கட்கு..

ஆனால், பொறுமையாக இருப்பது, அவசர கதியாக இயங்கும் கணினி உலகுக்கு உதவாதே ???!!!

என்றும் அன்புடன்,

9:13 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home